உள்ளத்தில் உறங்கா உள்ளம் எம்மக்கள்
கருவறையில் இருந்து வெளிவந்ததும் ஆரம்பிக்கும்உன் அழுகை .....
இடியென முழங்கும் பீரங்க்கின் அதிர்வில் பிரசவிக்கும்
குழைந்தைக்கு தாலாட்டு பாட குண்டு மழை இசை அமைத்து
தோட்டாக்களின் தாலாட்டு வரிகளில் நிரந்தர உறக்கம் ..
அன்னையவள் மண்ணில் வீழ்ந்து கிடக்க
அவள் முலையில் பாலருந்தும் உன் துயர் யாரறிவார் ?
அன்று தந்தைய இழந்தேன் இன்று தாயை இழந்தேன்
நாளை யாரை இழக்க போகின்றேன் என்று
நீ துடிக்கும் போது என் உள்ளம் எரிமலையாய் குமுறுகிண்டது..
என் தொப்புள்கொடி உறவே உன் கற்பை பறிக்கவரும் சிங்களனின்
உறுப்பை அறுதேரிந்துவிட்டு நீ மடிந்தாலும் ..
நீயும் ஒரு தியாக சுடர்தான் என்பதை மறந்துவிடாதே
ஒருவேளை உணவிற்கு ஒரு லாரி உமியை புடைத்து
கால்வைறு பசி தீர்க்கும் உன் நிலை கண்டும் மௌனம் சாதிக்கும்
அரக்கர்களிடம் உதவி கேட்டு என்ன பயன்
தொப்புள்கொடி உறவெண்ட உரிமையில் உதவி கேட்கும்
என் ஈழ மக்களே ,உடன்பிறப்பே என்று உயிரை குடிப்பவர்களும்
என் கழக கண்மணிகளே என்று கண்களை பிடுங்குபவர்களும்
இருக்கும் தமிழகத்திலா உதவி கேட்கின்டாய் !
சதுரங்க ஆட்டத்தில் வெட்டப்படும் காய் நீ ,ஆட்டம் ஆடுபவர் பெரிய கை(கள்) அல்லவா !